×

சேலத்தில் 100டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்

சேலம், ஏப்.9: கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை கொளுத்தி வருகிறது. சேலத்தில், கடந்த 31ம்தேதி உச்சபட்சமாக 109.7 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவானது. இதைதொடர்ந்து, 102 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த வகையில் பலநாட்களுக்கு பிறகு நேற்று (8ம்தேதி) 100 டிகிரிக்கு கீழ் வெயில் பதிவாகி உள்ளது. வெயிலின் அளவு 99.7  டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவானது. பகல்பொழுதுகளில் தகிக்கும் வெப்பத்தால், இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்கள் முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக்கொண்டும், கைகளில் ‘கிளவுஸ்’ மாட்டிக்கொண்டும் பயணிக்கின்றனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது. உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது. வெப்பத்தின் உஷ்ணத்தை தவிர்க்க பொதுமக்கள், இளநீர், தர்பூசணி, கரும்பூ ஜூஸ் மற்றும் பழச்சாறுகள் குடிக்கின்றனர். இனால் ஜூஸ், ஐஸ் கிரீம், தர்பூசணி கடைகளில் மக்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் உயரக்கூடும் என வானிலை  அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கொளுத்தும் வெயிலால் சேலத்தில் நுங்கு, இளநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

Tags : Salem ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...