அந்தமான், பெங்களூருவை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

பள்ளிபாளையம், ஏப்.9: அந்தமான், பெங்களூருவை சேர்ந்த 3 பேர் திருமண விழாவுக்காக கோவை வந்த போது கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அவர்கள் மருத்துவமனையில் சொந்த ஊரான குமாரபாளையம் முகவரியை கொடுத்ததால், கிருமிநாசினியுடன் சம்பந்தபட்ட முகவரிக்கு சென்ற நகராட்சி பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில், கடந்த 4நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அறிவிப்பை அடுத்து, நகராட்சி  பணியாளர்கள் கொரோனா பாதித்தவர்களின் வீட்டுக்கு சென்று கிருமி நாசினி தெளிக்க முயன்றனர். ஆனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள், எதற்காக கிருமிநாசினி தெளிக்கிறீர்கள் என நகராட்சி பணியாளர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள், இந்த வீடுகளை சேர்ந்த பெங்களூருவில் வசிக்கும் இருவர், அந்தமானில் வசிக்கும் ஒருவர் என 3 பேருக்கு கொரோனா இருப்பதாகவும், இதனால் மருந்து தெளிப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வீடுகளில் வசிப்பவர்கள்,  மேற்கண்ட மூவரும் குமாரபாளையத்தை சேர்ந்தவர்கள் தான். தற்போது இவர்கள் இங்கு வசிக்கவில்லை. அந்தமான், பெங்களூருவில் வசிக்கும் அவர்கள், கோவையில் நடந்த திருமணத்திற்கு வந்த போது கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் குமாரபாளையம் முகவரியை அளித்துள்ளனர் என்றனர்.

இதனால் நகராட்சி ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். கொரோனா பாதித்த 5 பேரின் வீடுகளில் கிருமிநாசினி தெளித்த அவர்கள்,  அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரை எச்சரித்தும் தனிமைப்படுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு நேரில் பார்வையிட்டு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில், கொரேனாவின் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று, மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.  16 பேர் கொரோனாவில் இருந்து நேற்று  குணமடைந்து வீடு திரும்பினர்.மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் வீடுகளில்  தனிமைப்படுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 232 ஆகும்.

நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஒட்டமெத்தை ரவுண்டானாவில்

புல், செடிகள் காய்ந்து கருகினபள்ளிபாளையம், ஏப்.9: நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், ஒட்டமெத்தை ரவுண்டானாவில் பல லட்சம் செலவிட்டு அழகிற்காக  வைக்கப்பட்ட புற்கள் மற்றும் செடிகள் ஆகியவை காய்ந்து கருகியுள்ளது.

பள்ளிபாளையத்தில் இருந்து சங்ககிரி, குமாரபாளையம் பிரிவு சாலையில் ஒட்டமெத்தை ரவுண்டானா உள்ளது. இங்கு பல லட்சம் மதிப்பில் செயற்கை புற்கள் மற்றும் செடிகள் வைக்கப்பட்டது.  அழகாக அமைக்கப்பட்ட ரவுண்டானா சுவர்களின்,  நீத்தார் நினைவஞ்சலி அறிவிப்புகள் தொங்க விடப்பட்டுள்ளன. வழிகாட்டி பலகை வளைந்து போயுள்ளது. திறப்பு விழாவுக்கு பின் நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் ஒட்டமெத்தை ரவுண்டானாவில் புற்கள் மற்றும் செடிகள் காய்ந்து கருகியுள்ளது. மக்கள் வரிப்பணம் பல லட்சம் வீணாகியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரவுண்டானாவில் எஞ்சியுள்ள செடிகளுக்கு தண்ணீர் வழங்கி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>