ராசிபுரத்தில் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ராசிபுரம், ஏப்.9:ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில், நகர திமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார்.  

நிகழ்ச்சியில் நகர இளைஞரணி செயலாளர் கார்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் ராம்குமார், ரவிக்குமார், கேசவன், பாபு, பரக்கத் அலி, ஜாபர்,  ராஜேஷ் பாபு, ஜெயக்குமார், அசோக் மூர்த்தி, அசோக், அஸ்வத் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>