×

நூற்றாண்டுகள் பழமையான சிவன் குளத்தில் தூர்வாரிய போது தோன்றிய திடீர் நீரூற்று

ராசிபுரம், ஏப்.9: ராசிபுரம்  நகரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலை, கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆண்ட மன்னர் வல்வில்ஓரி கட்டியதாக வரலாறு உள்ளது. இக்கோயிலிக்கு சொந்தமான, சுமார் 3 ஏக்கர் நிலம், பக்தர்கள் நீராடும் தெப்பக்குளம் கோயிலின் அருகில் உள்ளது. ஆனால், நீண்ட காலமாக  கொட்டப்பட்ட கழிவுகளால் குப்பை மேடாக மாறியது. இதனை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என சிவனடியார் திருக்கூட்ட தொண்டர்கள் முடிவு செய்தனர்.தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்த சிவ தொண்டர்கள்,  ஞாயிற்றுக்கிழமை தோறும் தெப்பக்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி கற்கள், மண் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில்,  குளத்தை சுற்றிலும் நான்கு புறமும் சதுர கற்களால் அழகுற அமைக்கப்பட்ட  படிகட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தூர்வாரும் பணியின் போது, திடீரென குளத்தில் நீரூற்று தோன்றியது. தண்ணீர் பெருக்கெடுத்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Shiva ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு