×

தேன்கனிக்கோட்டையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் விநியோகத்தில் தடை

தேன்கனிக்கோட்டை, ஏப்.9:  தேன்கனிக்கோட்டை பகுதியில் கோடை வெயில் அதிகரித்துள்ளதால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதால், குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இதில் கெலமங்கலம் அருகே உள்ள ஜெக்கேரியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மாஸ்டர் பேலன்ஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஓசூர், கெலமங்கலம் பகுதி நீரோட்ட பகுதி என்பதல் சீராக குடிநீர் செல்கிறது. ஆனால், தேன்கனிக்கோட்டை பகுதி மேடாக உள்ளதால் கலகோபசந்திரம் கிராமம் அருகே அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீரேற்றும் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து பெரிய மின்மோட்டர்கள் மூலம் தேன்கனிக்கோட்டை பகுதிக்கு பம்ப் செய்யப்படுகிறது. அங்கிருந்து அஞ்செட்டிக்கு பம்ப் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தேன்கனிக்கோட்டை பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீர் செய்யாமல் உள்ளதால் நீரேற்றும் நிலையத்திற்கு குடிநீர் வரவில்லை. அதனால் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த இரு வாரங்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. எனவே, உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Okanagan ,Tenkanikottai ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி