அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஏப்.9: கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கடந்த 6ம் தேதி நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம் மையத்தினை நேற்று கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த 6ம் தேதி அமைதியான முறையில் நடந்தது. வாக்கு எண்ணும் மையம், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் தரம் அளித்த இயந்திரங்கள் ஆகியவை வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories:

>