கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி, ஏப் 9: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 360 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 351 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகமாகி வருகிறது. கடந்த மாதம் இதே நாளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30க்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12 மடங்கு உயர்ந்து 351 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>