காரிமங்கலம் வார சந்தையில் ₹32 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், ஏப்.9 : காரிமங்கலம் வாரச்சந்தையில் ₹32 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி வாரச்சந்தை தேதி மாற்றம் செய்யப்பட்டு 7ம் தேதி நடந்தது. வாரச்சந்தையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 350 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 250 மாடுகள் ₹21 லட்சத்திற்கும், 400 ஆடுகள் ₹11 லட்சத்திற்கும் விற்பனையானது. கால்நடைகள் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், யுகாதி பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அதேபோல், 50 ஆயிரத்திற்கும் குறைவான தேங்காய் வரத்து இருந்ததால், ₹5 லட்சத்திற்கு விற்பனையானது. மொத்தம் ₹32 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

Related Stories:

>