×

புதுச்சேரி மாநில பாஜக தலைவருக்கு கொரோனா

புதுச்சேரி, ஏப். 9:  புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா 2வது அலை வேகம் எடுத்துள்ளது. புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 293 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், நியமன எம்எல்ஏவும், லாஸ்பேட்டை தொகுதி பாஜக வேட்பாளருமான சாமிநாதனுக்கு நேற்று காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவர், நேற்று காலை, ஜிப்மரில் பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சாமிநாதன் எம்எல்ஏ., ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாமிநாதன் எம்எல்ஏவுக்கு ெகாரோனா தொற்று பாதித்துள்ளதால், அவருடன் தொடர்புடைய கட்சி நிர்வாகிகள், அலுவலக ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags : Corona ,Puducherry ,BJP ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...