தூத்துக்குடி டிரைவர் மாயம்

ஸ்பிக்நகர், ஏப். 9: தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே மாயமான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் பாரதிநகர் முதல்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் துரைபாண்டி (32). கார் டிரைவரான இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 1ம் தேதி கோவில்பட்டியில் உள்ள நண்பரை பார்த்து வருவதாகக் கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரிக்கிறார்.

Related Stories:

>