×

நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை வளாகத்தில் புதிய சாலை பேராயர் தேவசகாயம் திறந்துவைத்தார்

நாசரேத், ஏப். 9: நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை பேராயர் தேவசகாயம் திறந்துவைத்தார். நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன், டாக்டர் கமலிஜெயசீலன் சார்பில் அமைக்கப்பட்ட டாக்டர் கமலிசாலை திறப்பு விழா நடந்தது. விழாவுக்குத் தலைமை வகித்த தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், புதிய சாலையைத் திறந்துவைத்தார். தூய யோவான் பேராலய தலைமை குருவானவரும், மருத்துவனை மேலாளருமான ஆன்ட்ரூ விக்டர் ஞானஒளி ஆரம்ப ஜெபம் செய்தார். மருத்துவனை நிர்வாக அலுவலர் ரத்தினகுமார் வரவேற்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஹேபஸ்வேதபோதகம், உதவி கண்காணிப்பாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன் வாழ்த்திப் பேசினார்.

இதில் பேராயரின் துணைவியார் சாந்தினி தேவசகாயம், புனித லூக்கா செவிலியர் கல்லூரித் தாளாளர் டாக்டர் கமலிஜெயசீலன், டாக்டர்கள் சாந்தி, ஹென்சன், பனிலா,  சுவீட்லின், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ், தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் சாந்தகுமாரி, தூய யோவான் பேராலய உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், ஏ.டி. பாலச்சந்திரன், ஏ.டி.ராஜா, பொன்ரத்தினம், மாமல்லன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். புனித லூக்காமருத்துவமனையில் டாக்டர் கமலி ஜெயசீலன் 31 ஆண்டுகளாக மருத்துவமனை தலைமை மருத்துவராக சிறப்பாகபணியாற்றி, அவரின் முயற்சியில்  அறுவை சிகிச்சை அறை, வெளிநோயாளிகட்டிடம்,  கண், பல் சிகிச்சைபிரிவு அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் ஆன்ட்ரூ விக்டர், நிர்வாக அலுவலர்கள் ரத்தினகுமார், ஜெபகிருபை, இளநிலை உதவியாளர் மோசஸ்ஜெபமணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : Archbishop ,Devasakaya ,St. Luke's Hospital ,Nazareth ,
× RELATED அதிமுக உடனான பேச்சுவார்த்தையில்...