தூத்துக்குடியில் சிறுநீரகம் பாதித்த சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பர்னிச்சர், அரிமா சங்கம் வழங்கல்

தூத்துக்குடி, ஏப். 9: தூத்துக்குடியில் சிறுநீரகம் பாதித்த சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு பர்னிச்சர் சங்கம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகள் ஞான அனுஷா (15). சிறுநீரக பாதிப்பால் சிறுமியின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து மாற்று சிறுநீரகம் பொருத்திட ரூ. பல லட்சம் தேவைப்படும் நிலையில் தூத்துக்குடி மாநகர பர்னிச்சர்ஸ் விற்பனையாளர்கள் முன்னேற்ற நலச்சங்கமும், தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கமும் ரூ 1 லட்சம் வழங்க முடிவுசெய்தன. இதையடுத்து தூத்துக்குடி பெருமாள்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.பி.ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் இதற்கான தொகையை வழங்கினார். இதில் கலந்து கொண்ட தொழிலதிபர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், தங்களது எஸ்.டி.ஆர் மற்றும் அபி நிறுவனங்கள் சார்பில் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர டி.எஸ்.பி கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், போக்குவரத்து எஸ்ஐ வெங்கடேஷ், தனிப்பிரிவு எஸ்ஐ  ஞானராஜன், தூத்துக்குடி மாநகர பர்னிச்சர்ஸ் விற்பனையாளர் நலச்சங்கத் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராஜன், பொருளாளர் பவுல்ராஜ், அரிமா சங்க மாவட்டத் தலைவர்  தெய்வநாயகம், பியர்ல் அரிமா சங்கத்தலைவர் அபிராமி சந்திரசேகர், ரத்னா ரவீந்திரன் மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>