சிவகிரி அருகே திமுக பிரமுகரை தாக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

சிவகிரி, ஏப்.9: சிவகிரி அருகே தேர்தல் தகராறு காரணமாக திமுக பிரமுகரை தாக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரி பாரதி கிழமேல் தெருவைச் சேர்ந்தவர் சடையாண்டி மகன் மாரிமுத்து (28). இவர் நாம் தமிழர் கட்சி வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இவர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாரிமுத்து, திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் 7ம்தேதி இரவு மாரிமுத்து தனது ஸ்டூடியோவில் இருந்தபோது அங்கு வந்த வாசுதேவ

நல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்த மதிவாணன் (35), வடுகப்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் காசிராஜன் ஆகிய இருவரும் எப்படி திமுகவிற்கு ஆதரவாக செயல்படலாம் என்று கூறி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாரிமுத்து சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து காசிராஜனை கைது செய்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனை தேடி வருகிறார்.

Related Stories:

>