ஆண்களை விட கூடுதலாக வாக்களித்த 66,948 ெபண்கள் 6,18,466 பேர் வாக்களிக்கவில்லை வாக்கு எண்ணும் மையங்களுக்கு

திருச்சி, ஏப்.8: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு 67.02, கிழக்கு 66.86, ரங்கம் 76.09, மணப்பாறை 75.87, திருவெறும்பூர் 66.75, லால்குடி 79.25, மண்ணச்சநல்லூர் 79.63, முசிறி 76.02, துறையூர்(தனி) 76.63 சதவீத வாக்குகள் பதிவாகி உளளது. மொத்தம் 73.55 சதவீதம் வாக்குகள் பதிவானது. மண்ணச்சநல்லூர் தொகுதியில் இரவு 8.10 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மற்ற இடங்களில் 7 மணியுடன் முடிந்தது. மணப்பாறை, ரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் திருச்சி மேற்கு, கிழக்கு தொகுதிகளுக்கு மன்னார்புரத்தில் உள்ள ஜமால் முகமது கல்லூரியிலும், துறையூர், முசிறி தொகுதிகளுக்கு துறையூர் இமயம் கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் தொகுதி வாக்குகள் சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணி வரை கொண்டு செல்லப்பட்டது.

சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு மணப்பாறை, ரங்கம், திருவெறும்பூர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விடிய விடிய எடுத்து வரப்பட்டு தனித்தனியாக 3 கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வரிசை எண் அடிப்படையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் ஸ்டராங் ரூமை மணப்பாறை, ரங்கம் தேர்தல் பொது பார்வையாளர்கள் உமாகாந்த் திரிபாதி, திருவெறும்பூர் முகமத் தயாப் ஆகியோர் பூட்டி சீல் வைத்தனர்.

இதே போல் மன்னார்புரம் ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி மேற்கு தொகுதி வாக்கு இயந்திரங்கள் நூர்தீன் ஹாலிலும், திருச்சி கிழக்கு தொகுதி வாக்கு இயந்திரங்கள் காஜாமியான் ராவுத்தர் ஆடிட்டோரியத்திலும் தேர்தல் பொது பார்வையாளர்கள் கிரிஷ் (மேற்கு), ரஜ்புத் (கிழக்கு) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் திவ்யதர்ஷினி பூட்டி சீல் வைத்தார். சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் லால்குடி, மண்ணச்சநல்லூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி கட்டிடங்களில் வைத்து பூட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமன் முன்னிலையில் பொது பார்வையாளர் கிருஷ்ணகுமார் பூட்டி சீல் வைத்தார்.துறையூர் இமயம் கல்லூரியில் முசிறி, துறையூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் தனித்தனி கட்டிடங்களில் வைக்கப்பட்டு தேர்தல் பொது பார்வையாளர் சுரேந்தர் ராம் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

Related Stories:

>