×

விபத்து ஏற்படுவதை தவிர்க்க தாராசுரம்- பள்ளியக்ரகாரம் சாலை விரிவாக்க செய்ய வேண்டும்

பாபநாசம், ஏப். 8: கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான சாலைகளுள் ஒன்றாகும். இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை பாபநாசம் துவங்கி அய்யம்பேட்டை வரை சாலையோர ஆக்கிரமிப்பு காரணமாக குறுகலாக சாலையாக மாறி வருகின்றது. சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்தச் சாலையை தாராசுரம் தொடங்கி பள்ளியக்ரகாரம் வரை சாலையை விரிவாக்கம் செய்து தரமாக சாலை போட வேண்டும் என்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குண்டும், குழியுமான சாலையிலேயே பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்ற சிலர் அதி விரைவாகச் செல்கின்றனர். தனியார் பேருந்துகளும் அதி விரைவாகச் செல்கின்றன. நேற்று பாபநாசம் அடுத்த ராஜகிரியில் தஞ்சாவூரிலிருந்து வந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் ஒரு இளைஞருக்கு காலில் லேசான காயமேற்ப் பட்டது. இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்க தனியார், அரசுப் பேருந்துகளில் வேகக் கட்டுப் பாட்டு கருவியும், சாலையில் கண் காணிப்பு கேமராவும் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tarasuram-Palliyagraha road ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்