கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கும்பகோணம், ஏப். 8: கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர் . கும்பகோணம் சக்கரபாணி ஸ்வாமி கோயிலில் பங்குனி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக விஜயவல்லித்தாயார் , சக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்தனர். இதையடுத்து மாலை மாற்றுதல்,ஊஞ்சல்,திருஷ்டி பிடி சுற்றுதல் ஹோமம் உள்ளி–்ட்ட வைபவங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>