×

வீடு வரியை குறைக்க எஸ்பி கார் டிரைவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலைஉதவியாளர் கைது

பெரம்பலூர்,ஏப்.8: பெரம்பலூர் நகராட்சி எளம்பலூர் சாலையில் உப் போடை பகுதியில் வசிப் பவர் வெங்கடேசன்(35). போலீஸ் ஏட்டு. இவர் துறைமங்கலம் யூனியன் அலுவலகம் அருகேயுள்ள பெரம்பலூர் மாவட்ட எஸ்பி முகாம் அலுவலகத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் உப்போடை பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக பெரம்பலூர் நகராட்சி அலுலகத்திற்கு வந்து வீட்டின் வரியை நிர்ணயம் செய்து தரக் கோரியுள்ளார். இதற்காக நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் பில் கலெக்டரான, பெரம்பலூர் எளம்பலூர் சாலையில், ரோஸ் நகர் பகுதியில் வசி த்து வரும் அப்பு என்கிற அப்லோஸர்(45) என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அப்லோஸர் வீட்டுவரியை நிர்ணயம் செய்ய ரூ20ஆயிரம் கொடுத்தால் வீட்டு வரி ஆண்டுக்கு ரூ.1800 மட்டுமே வருமாறு செய்து விடலாம். லஞ்சம் தராவிட்டால் ஆண்டுக்கு வீட்டு வரியாக குறைந்தது ரூ3ஆயிரத்திற்கு மேல்வரும். அதனா ல் லஞ்சப் பணத்தை சீக்கிரம் தர ஏற்பாடு செய்யுங்கள் எனக்கூறியுள்ளார். அதற்குத் தயங்கிய வெங்கடேச னிடம் பேரம்பேசிய அப்லோ ஸர் ரூ15ஆயிரம் கொடுத் தால்கூட போதும் எனக்கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஏட்டு வெங்கடேசன் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்து றை அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.. பின்னர் லஞ்ச ஒழி ப்புத்துறை போலீசாரின் யோசனைப்படி ஏட்டு வெங் கடேசன் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழங்கிய ரசாயன பவுடர்தடவிய ரூ. 15 ஆயிரம் பணத்தை பெர ம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று மாலை 6.30 மணிக்கு வந்து அப்லோஸ ரிடம் கொடுத்துள்ளார். அப்போது பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையில், இன்ஸ்பெ க்டர்கள் ரத்னவள்ளி, சுலோச்சனா, ஏட்டு மனோகர் உள் ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக நகராட்சி அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்து, அப்லோஸரை கையுங் களவுமாகப் பிடித்துள்ளனர். மேலும் நக ராட்சி அலுவலகக் கதவு, மெயின்கேட் ஆகியவற்றை சாத்திவிட்டு இரவு 10.30 மணிவரை 4மணிநே ரம் விசாரணை நடத்தி கைது செய்தனர். இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் 5பேரி்டம் விசாரணை நடத்தி னர். மேலும் எளம்பலூர் சாலை ரோஸ்நகரில் உள்ள அப்லோஸர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags : SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்