×

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 தொகுதியில் 75.16% வாக்குப்பதிவு வேதாரண்யத்தில் 80.06%

நாகை, ஏப்.8: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 75.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகை மற்றும் மயிலாடுதறை மாவட்டங்களில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த 6 சட்டசபை தொகுதிகளில் 75.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவில் இரவு 7 மணி நிலவரப்படி சீர்காழியில் 74.6 சதவீதமும், மயிலாடுதுறையில் 70.17 சதவீதமும், பூம்புகாரில் 75.39 சதவீதமும், நாகையில் 71.99 சதவீதமும், கீழ்வேளூரில் 80.1 சதவீதமும், வேதாரண்யத்தில் 80.6 சதவீதமும் என மொத்தமாக 75.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags : Nagai, Mayiladuthurai district ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்