×

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.17ல் கொடியேற்றம்

திருப்புத்தூர், ஏப்.8: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌ மிய நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை தேர் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும். சித்திரை உற்சவ விழாவை முன்னிட்டு வரும் ஏப். 16ம் தேதி மாலை மிருத்ஸங்கரஹணம், சேணை முதல்வர் புறப்பாடு நடைபெறும். ஏப்.17ம் தேதி காலையில் கொடியேற்றம் நடைபெறும். இரவில் காப்பு கட்டுதலுடன் முதல் நாள் உற்சவம் துவங்கும். தொடர்ந்து 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி சிம்மம், அனுமார், கருட சேவை, சேஷ, வெள்ளி யானை, தங்க தோளுக்கியானில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். 6ம் நாளான ஏப்.22ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறும். 7ம் நாளான ஏப்.23ல் மாலை சூர்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 9ம் திருநாளான ஏப்.25ல் மாலை 4 மணியளவில் திருத்தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நடைபெறும். இரவு சுவாமி அன்ன வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும்.10ம் நாளான ஏப்.26ல் காலை 6.40 மணியளவில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறும். அதனை தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். மாலை 5 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க திருத்தேரோட்டம் நடைபெறும். 12ம் திருநாளான ஏப்.28ம் தேதி இரவு பெருமாள் தேவி, பூமிதேவியாருடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளல் நடைபெறும்.

Tags : Chithirai Festival ,Thirukkoshtiyur Perumal Temple ,
× RELATED திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்...