×

திருப்புத்தூர் பகுதியில் இன்றும்,நாளையும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்புத்தூர், ஏப்.8: திருப்புத்தூரில் இன்றும், நாளையும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. சுகாதாரத்துறை அறிவித்துள்ளதுபடி, அதிகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுப்பதற்காக 45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் எளிதாக தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்காக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் இலவச தடுப்பூசி முகாம் நடத்துகின்றனர்.  முகாம் திருப்புத்தூர் கண்டரமாணிக்கம் ரோட்டில் உள்ள இன்பம் மஹாலில் இன்று 8ம் தேதியும், நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் முதல் நாளும், ஊசி போட்டுக்கொள்ளும் அன்றைய நாளும் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது. வரும் பொழுது கண்டிப்பாக ஆதார் அட்டையை கொண்டு வரவண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும். கூட்டத்தை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவிற்கு, 95976 23498, 94882 60580 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Tags : corona vaccination ,Tiruputhur ,
× RELATED 100% சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி...