×

தேர்தல் நேரத்தில் குண்டாஸ் இல்லை

சிவகங்கை, ஏப்.8: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு பிப்.26 வெளியானது. இதையடுத்து போலீசார், தேர்தல் பிரிவு வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஸ்டேசன் வாரியாக அந்த ஸ்டேசன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்னைக்குறிய கிராமங்கள், நபர்கள் கணக்கெடுக்கப்பட்டது. கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நபர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் சிறையில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள் கடந்த பல ஆண்டுகளாக எந்த பிரச்னையிலும் ஈடுபடாமல் உள்ளவர்கள், தற்போதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என பல்வேறு பிரிவுகளில் கணக்கெடுக்கப்பட்டது. ஒவ்வொருவரின் மீதும் மொத்தம் எத்தனை வழக்குகள் உள்ளன, பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள், பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாறு தேர்தல் காலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்தலுக்கு முன் அவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்படுவது வழக்கம். ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் அதுபோல்வே செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் தேர்தலுக்கான குண்டாஸ் யார் மீதும் போடப்படவில்லை.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது