×

தஞ்சாவூர்-சாயல்குடி நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

காளையார்கோவில், ஏப்.8: காளையார்கோவிலில் இருந்து கல்லல் வழியாக காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலை மிக குறுகிய சாலையாக உள்ளது. இவற்றில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு மற்றும் வாகனம் நிறுத்துவதினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.காளையார்கோவிலில் இருந்து கல்லல் வழியாக காரைக்குடி செல்லும் தஞ்சாவூர் சாயல்குடி மாநில நெடுஞ்சாலை கடந்த 2018 மார்ச் மாதம் பெயரளவில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. அதன்பின்பு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் இச்சாலை மிகவும் குறுகிய சாலையாக மாறி விட்டது.

மேலும் சாலையின் இருபுறமும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. மேலும் இச்சாலை வழியாக பரமக்குடி, காளையார்கோவில், கல்லல், காரைக்குடி, வழியாக பல்வேறு ஊர்களுக்கு ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்ட கார்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. காளையார்கோவிலில் இருந்து கல்லல் ரோடு திரும்பும் வளைவில் தடுப்பு வளைவு இல்லாததால், அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுகின்றது. அதேபோன்று மறவமங்கலம் வழியாக பரமக்குடி, மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags : Thanjavur-Sayalgudi highway ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது