மண்டல இறகுபந்து- சதுரங்க போட்டியில் தேனி என்எஸ் கல்லூரி வெற்றி

தேனி, ஏப். 8: திண்டுக்கல்லில் நடந்த மண்டல அளவிலான சதுரங்கம், இறகுபந்து போட்டிகளில் தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கான 17வது மண்டல அளவிலான சதுரங்கம், இறகுபந்து போட்டிகள் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் தேனி, கரூர், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.சதுரங்க போட்டியில் தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றனர். இறகுபந்து போட்டியில் இக்கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன், பொது செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணை செயலாளர் ராஜ்குமார், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன், பெண்கள் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா, உடற்கல்வி இயக்குநர்கள் சுந்தரராஜன், செல்வக்குமார், மாலினி ஆகியோர் பாராட்டினர்.

Related Stories:

>