விருதுநகர் மாவட்ட 7 தொகுதிகளில் திருச்சுழியில் அதிக வாக்குகள் பதிவு சிவகாசியில் குறைவு

விருதுநகர், ஏப்.8: விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் இறுதியாக பதிவான வாக்குகள் விபரம்: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 84,915, பெண்கள் 91,661, இதரர் 3 என மொத்தம் 1,76,579 பேர் ஓட்டு போட்டனர். ஓட்டு சதவீதம் 73.89 ஆகும். திருவில்லிபுத்தூர் தொகுதியில் ஆண்கள் 89,123, பெண்கள் 93,571, இதரர் 5 என மொத்தம் 1,82,699 பேர் ஓட்டு போட்டனர். ஓட்டு சதவீதம் 73.14 ஆகும்.சாத்தூர் தொகுதியில் ஆண்கள் 91,645, பெண்கள் 98,170, இதரர் 3 என மொத்தம் 1,89,818 பேர் ஓட்டு போட்டனர். சதவீதம் 75.17 ஆகும்.சிவகாசி தொகுதியில் ஆண்கள் 90,265, பெண்கள் 93,236, இதரர் 2 என மொத்தம் 1,83,503 பேர் ஓட்டு போட்டனர். சதவீதம் 70.16 ஆகும். விருதுநகர் தொகுதியில் ஆண்கள் 78,206, பெண்கள் 81,254, இதரர் 7 என மொத்தம் 1,59,467 பேர் ஓட்டு ேபாட்டனர். சதவீதம் 71.27 ஆகும்.

அருப்புக்கோட்டை தொகுதியில் ஆண்கள் 81,209, பெண் 87,645, இதரர் 2 என மொத்தம் 1,68,856 பேர் ஓட்டு போட்டனர். சதவீதம் 75.60 ஆகும். திருச்சுழி தொகுதியில் ஆண்கள் 83,573, பெண்கள் 87,662, இதரர் 2 என மொத்தம் 1,71,237 பேர் ஓட்டு போட்டனர். சதவீதம் 77.46 ஆகும். மாவட்டத்தில் ஆண்கள் 5,98,936, பெண்கள் 6,33,199, இதரர் 24 என மொத்தம் 12,32,159 பேர் ஓட்டு போட்டுள்ளனர். மொத்த சதவீதம் 73.74 ஆகும்.

Related Stories:

>