×

கணவனின் வீட்டு வாசலில் மகனுடன் தாய் தர்ணா போராட்டம் நிர்க்கதியாக விட்டதால் பரிதவிப்பு

விருதுநகர், ஏப்.8: விருதுநகர் முத்துராமன்பட்டி சங்கரநாராயணன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(41), மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியில் இருக்கிறார். இவருக்கும் மதுரையை சேர்ந்த ஆர்த்தி(38) என்பவருக்கும் 2010ல் திருமணம் நடந்தது. தற்போது சஞ்சய்(10) என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு நகை, பணம், வரதட்சணை பொருட்கள் வழங்கியும், செல்வராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என ஒதுக்கி வைத்தார். விவாகரத்து கோரி விருதுநகர் துணை நீதிமன்றத்தில் 2012ல் செல்வராஜ் தொடர்ந்த வழக்கு முகாந்திரம் இல்லை என தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2017ல் மேல்முறையீடு செய்தார். விவாகரத்திற்கு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையது அல்ல என 2020 டிசம்பரில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.அதன்பின், டிசம்பர் 2020ல் விருதுநகர் டிஎஸ்பி அலுவலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனைவி, மகன் எதிர்காலத்திற்கு ஜீவனாம்சமாக ரூ.50 லட்சம் தருவது அல்லது ரூ.25 லட்சமும் மாதம் ரூ.25 ஆயிரமும் பணம் தருவதாக எழுத்துப்பூர்வமாக செல்வராஜ் ஒப்புதல் அளித்தார்.  

2021 மார்ச் மாதத்திற்குள் தருவதாக கூறினார். ஆனால் பணம் தரவில்லை. எனவே ஆதரவில்லாத ஆர்த்தி நேற்று கணவருடன் சேர்த்து வைக்க கோரி தனது 10 வயது மகனுடன் விருதுநகரில் கணவர் செல்வராஜ் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். ஆர்த்தி கூறுகையில், கணவர் செல்வராஜ் தரப்பில் வாழ்க்கைக்கு வழி கூறாமல் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் இருந்து தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், நாயை ஏவியும், கம்பால் அடிக்கவும் வருகின்றனர் என தெரிவித்தார். போலீசார் பேசி சமாதானம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்காததால் பரபரப்பு மதியம் வரை தொடர்ந்தது.

Tags : Tarna ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...