கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் சுகாதாரத்துறை வேண்டுகோள்

தொண்டி, ஏப்.8:  கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருப்பது தெரிய வருகிறது. இது மேலும் பரவச்செய்யும் விதமாக அமைந்துவிடும் என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், சுகாதாரத்துறை சார்பில் அதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியே வரும் நேரங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வெளியே வரவேண்டும். மீறுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தொற்று வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

Related Stories:

>