திருமங்கலம் தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிப்பு

திருமங்கலம், ஏப்.8: நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 803 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 64 பேரும், பெண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேரும் உள்ளனர். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இந்த தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 77 ஆயிரத்து 803 வாக்காளர்களில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 999 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் வாக்கு சதவீதம் 78.11 ஆகும். இதில் ஆண்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 434 பேரும், பெண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 563 பேரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 9 பேர் உள்ள இந்த தொகுதியில் அவர்களில் இரண்டு பேர் வாக்களித்துள்ளனர்.

Related Stories:

>