திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மீது வழக்கு

அவனியாபுரம், ஏப்.8: டோக்கன் கொத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்ட திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் நேற்று முன்தினம் டோக்கன் மூலம் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து டோக்கன் கொடுத்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாய் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் காவல்துறை துணை ஆணையர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்குமாறு  கூறி கூட்டத்தை கலைத்தனர். ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டு ெபாதுமக்களுக்கு இடைஞ்சல் செய்ததாக, வேட்பாளர்  பொன்னுத்தாய், வட்டச் செயலாளர் போஸ்,  பாண்டியம்மாள் உட்பட 20 பேர் மீது அவனியாபுரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

>