×

மேலூர் அருகே பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா கட்லா, அயிரை சிக்கியது

மேலூர், ஏப்.8: மேலூர் அருகே ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்ட மீன் பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கட்லா, அயிரை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. மதுரை மேலூர் அருகில் உள்ள இடையவலசையில் உள்ள பெரிய கண்மாயில் நேற்று ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பரந்து விரிந்த இக்கண்மாயில் முழங்கால் அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. கண்மாய்கரையில் சுற்றி திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை மற்றும் கச்சாவால் மீன்களை பிடித்தனர். கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் 1 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டன. கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

Tags : Katla ,Melur ,
× RELATED திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் மீன்பிடி திருவிழா