மதுரை மாநகர் பகுதிகளில் தடையை மீறி விற்கப்பட்ட 204 மதுபாட்டில் பறிமுதல் 16 பேர் கைது

மதுரை, ஏப்.8:  தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து. இந்த வாக்குப்பதிவை எவ்வித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முக்கியமாக, மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவிட்டது. இதனால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. கள்ளத்தனமாக மதுவிற்பனை நடக்கிறதா என தனிக்குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. மேலும், மதுவிலக்கு போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான ஏப்.6ம் தேதி, வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த நேரத்தில் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்பட்டன. இதை கண்டறிந்த போலீசார் மது விற்றவர்களை கைது செய்தனர். தெற்குவாசல், புதூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் தெற்குவாசல், புதூர், செல்லூர், தல்லாகுளம், ஜெய்ஹிந்துபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  தீவிர சோதனை மேற்கொண்டு, அனுமதியின்றி மது விற்ற 16 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 204 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மதுரை மாவட்டத்தில் ஊமச்சிகுளம், ஆண்டார்கொட்டாரம், கருப்பாயூரணி, உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு அன்று விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 560 மதுபாட்டில்களை போலீசார் முன்கூட்டியே பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர்.

Related Stories:

>