×

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விடிந்த பின்பு சென்ற வாக்குப்பதிவு இயந்திரம்

கொடைக்கானல், ஏப். 8: கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களில் பதிவான வாக்கு இயந்திரங்கள் காலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் சின்னூர், பெரியூர் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. விறுவிறுப்பான நடந்த இத்தேர்தலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி நிலவரப்படி 73 சதவீத வாக்குகள் பதிவாகின. கொடைக்கானல் நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அன்றிரவே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் சாலை வசதி இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள பெரியூர், சின்னூர் மலைக்கிராமங்களில் இரவு நேரம் வர முடியாது என்பதால் நேற்று வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பெரியகுளம் சாலை வரை வனப்பகுதிக்குள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வாகனத்தில் பழநிக்கு அனுப்பி வைக்கப்ட்டது. வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார், நக்சல் தடுப்பு போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...