ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தின விழா

ஒட்டன்சத்திரம், ஏப். 8:  ஒட்டன்சத்திரம் சிஎப் மருத்துவமனை கல்லூரியில் உலக சுகாதார தின விழா நடந்தது. இந்திய மருத்துவக்கழகம் ஒட்டன்சத்திரம் கிளை, ரெட் கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பாக நடந்த இவ்விழாவிற்கு மருத்துவர் சூசில்தரியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விக்டோரியா வரவேற்றார். ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட இணை செயலாளர் ஹெரால்டு ஜாக்சன் முன்னிலை வகித்தார். மருத்துவர் ஆசைத்தம்பி உலக சுகாதார தினத்தின் நோக்கம் குறித்து பேசினார். கட்டூரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவர் கருப்பண்ணன் பரிசு வழங்கி பாராட்டினார். முடிவில் குயிலா நன்றி கூறினார்.

Related Stories:

>