தேசிய பூப்பந்தாட்ட ேபாட்டி தாடிக்கொம்பு மாணவர்கள் தங்கம், வெள்ளி வென்றனர்

திண்டுக்கல், ஏப். 8: தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் தாடிக்கொம்பு மாணவர்கள் தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏப்.1ம் தேதி முதல் 4ம் தேதி வரை 66ம் ஆண்டு தேசிய அளவிலான சீனியர் பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதில் தமிழக அணிக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த பரமசிவம் பங்கேற்று தங்கம் வென்றார். அதேபோல் ஐவர் பிரிவு போட்டிகளில் தாடிக்கொம்பு மாணவர்கள் பரமசிவம், கார்த்திக் ராஜ் ஆகியோர் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று தமிழக அணிக்கு பெருமை சேர்த்தனர். மேலும் நடந்து முடிந்த போட்டிகளில் பரமசிவம் தேசிய அளவில் சிறந்த வீரராக தேர்வு பெற்று ‘ஸ்டார் ஆப் இந்தியா’ என்ற விருதினையும் வென்று சாதனை படைத்தார். பதக்கம் வென்ற வீரர்களை தமிழக பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் டாக்டர் சீனிவாசன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பூப்பந்தாட்ட கழக உறுப்பினர்கள், தாடிக்கொம்பு ஏஆர் பூப்பந்தாட்ட அகாடமி வீரர்கள் வாழ்த்தினர்.

Related Stories:

>