×

அம்பத்தூர் பஸ் நிலையத்தில் பகலில் மாடுகள், இரவில் நாய்கள் தொல்லை: பயணிகள் அவதி

அம்பத்தூர், ஏப்.8: அம்பத்தூர் பஸ் நிலையத்தில் நாய்கள், மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் பயணிகளை கடிக்கவும், முட்டவும் செய்வதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு அம்பத்தூர் வழியாக சி.டி.எச் சாலை செல்கிறது. இச்சாலையின் ஓரத்தில் தான் அம்பத்தூர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 300க்கு மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தை அம்பத்தூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தில் மாடுகள், நாய்கள் கண்டபடி சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வந்து செல்கின்றனர்.  

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அம்பத்தூரில் மண்டல அலுவலகம், கருவூலம், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார்பதிவாளர், தாலுகா, மின்சாரவாரிய அலுவலகம், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேற்கண்ட அலுவலங்களுக்கு சென்றுவர அம்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பொதுமக்கள் மாநகர பேருந்து மூலமாக சென்று வருகின்றனர். மேலும், இங்கிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கும் ஏராளமான தொழிலாளர்கள் செல்கின்றனர். இதோடு மட்டுமில்லாமல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் மூலமாக பயணிகள் சென்று வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தில் சமீப காலமாக மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதில், சில மாடுகள் பயணிகளை முட்டுகின்றன. இதனால் பயணிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், மாடுகளால் பயணிகள் பேருந்தில் நிலையத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இவைகள் இருக்கைகள் பகுதி மற்றும் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களிலும் ஆங்காங்கே சாணத்தை போட்டு செல்கின்றன. இதனால், பயணிகள் பேருந்து நிலையத்தில் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பேருந்து நிலையத்தில் நிற்க முடியவில்லை. இதோடு மட்டுமல்லாமல், சிறுவர்-சிறுமிகள் சாணத்தை தெரியாமல் மிதித்து விடுகின்றனர்.

பின்னர், அவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது உள்ளே நாற்றம் அடிக்கிறது. இதனால், அனைத்து பயணிகளும் சிரமப்படுகின்றனர். ஒரு புறம் மாடுகள் என்றால், இன்னொரு பக்கம் நாய்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. இவைகள், பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள துரித உணவகங்களில் உள்ள இறைச்சி கழிவுகளை சாப்பிட்டு வருகின்றன. பின்னர், அவைகள் பஸ் நிலையத்தை கழிப்பறையாக பயன்படுத்துகின்றன. இதனால், பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசுகின்றன. இதோடு மட்டுமில்லாமல், பயணிகள் கவனிக்காமல் நாய்களின் மலக்கழிவுகளை மிதித்து விட்டு துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
மேலும், அவர்கள் கவனிக்காமல் பேருந்தில் ஏறினாலும் அனைவரும் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர்.

இதோடு மட்டுமல்லாமல், நாய்களில் சில பயணிகளை இரவு நேரங்களில் விரட்டி கடிக்கின்றன. இதனால் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி பஸ் நிலையத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை அம்பத்தூர் மண்டல நிர்வாகத்திற்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், தினமும் அம்பத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகள் நாய் மற்றும் மாடுகளின் தொல்லையால் அவதிப்படுகின்றனர். எனவே, அம்பத்தூர் மண்டல நிர்வாகம் கவனித்து அம்பத்தூர் பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Ambattur ,
× RELATED அம்பத்தூர், பொன்னேரி பகுதிகளில் விடிய...