×

மாவட்டத்தில் 77.4 சதவீத வாக்குப்பதிவு வேப்பனஹள்ளியில் அதிகபட்சமாக 81.3 சதவீதம் பதிவு

கிருஷ்ணகிரி, ஏப்.8: கிருஷ்ணகிரி மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 77.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் வேப்பனஹள்ளி தொகுதியில் அதிகபட்சமாக 81.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 77.4 சதவீத வாக்குகள் பதிவானது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 16 லட்சத்து 4 ஆயிரத்து 11 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 6 லட்சத்து 26 ஆயிரத்து 870 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 7 ஆயிரத்து 239 பெண் வாக்காளர்களும், இதரர் 49 உட்பட என மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 158 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்: ஊத்தங்கரை(தனி) தொகுதியில் 119361 ஆண் வாக்காளர்களில், 93905 பேர் வாக்களித்துள்ளனர். 118393 பெண் வாக்காளர்களில் 92442 பேர் வாக்களித்துள்ளனர். இதரர் 56 வாக்காளர்களில் 20 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மொத்த வாக்கு சதவீதம் 78.4 ஆகும்.

பர்கூர் தொகுதியில் 121570 ஆண் வாக்காளர்களில் 95984 பேர் வாக்களித்துள்ளனர். 124209 பெண் வாக்காளர்களில் 98439 பேர் வாக்களித்துள்ளனர். இதரர் 16 வாக்காளர்களில் 2 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மொத்த வாக்கு சதவீதம் 79.1 ஆகும்.
கிருஷ்ணகிரி தொகுதியில் 130541 ஆண் வாக்காளர்களில் 103283 பேர் வாக்களித்துள்ளனர். 135588 பெண் வாக்காளர்களில் 105641 பேர் வாக்களித்துள்ளனர். இதரர் 38 வாக்காளர்களில் 13 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்கு சதவீதம் 78.5 ஆகும்.
வேப்பனஹள்ளி தொகுதியில் 127960 ஆண் வாக்காளர்களில் 105414 பேர் வாக்களித்துள்ளனர். 123353 பெண் வாக்காளர்களில் 98948 பேர் வாக்களித்துள்ளனர். இதரர் 33 வாக்காளர்களில் 2 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மொத்த வாக்கு சதவீதம் 81.3 ஆகும்.

ஓசூர் தொகுதியில் 179466 ஆண் வாக்காளர்களில் 126819 பேர் வாக்களித்துள்ளனர். 172149 பெண் வாக்காளர்களில் 119684 பேர் வாக்களித்துள்ளனர். இதரர் 100 வாக்காளர்களில் 4 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்கு சதவீதம் 70.1 ஆகும்.
தளி தொகுதியில் 128931 ஆண் வாக்காளர்களில் 101465 பேர் வாக்களித்துள்ளனர். 122214 பெண் வாக்காளர்களில் 92085 பேர் வாக்களித்துள்ளனர். இதரர் 33 வாக்காளர்களில் 8 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்கு சதவீதம் 77.1 ஆகும்.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் பதிவான சராசரி வாக்குகள் சதவீதம் 77.4 ஆகும்.

பெண்கள் அதிகம்
வாக்களித்த தொகுதி
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1,24,209 பெண் வாக்காளர்களில், 98439 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதன் சதவீதம் 79.3 ஆகும். இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்கு சதவீதம் 79 மட்டுமே ஆகும்.

Tags : Veppanahalli ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு