×

கே.ஜி.ரமேஷ்குமாருக்கு புதிய பதவி குமரி மேற்கு மாவட்ட காங். தலைவர் தாரகை கத்பர்ட்

நாகர்கோவில், ஏப்.8: குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் வாக்குபதிவு நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலோடு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரிந்துரையின் பேரில் கீழ்கண்டவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தாரகை கத்பர்ட், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏ.பி.பாஸ்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராக கே.ஜி.ரமேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ பதவி வகித்து வந்தார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார். இந்தநிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கட்சி நிர்வாகியாக இருந்த சாமுவேல் ஜார்ஜ் சுயேட்சையாக போட்டியிட்டார்.அவரை போட்டியில் இருந்து விலக செய்யும் நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தேர்தலின்போது விஜயதரணிக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒரு தரப்பை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ கட்சியை விட்டு நீக்கியிருந்தார். இந்தநிலையில் தேர்தல் முடிந்ததும் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் பதவியில் இருந்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ நீக்கப்பட்டது கட்சி வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : KG Rameshkumar ,Kumari ,West District ,Taraki Cuthbert ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...