×

பந்தலூரில் பயன்படுத்தப்பட்டதைவிட கூடுதலாக இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களால் சர்ச்சை

பந்தலூர், ஏப். 8:  பந்தலூரில் உள்ள ஒரு  வாக்குசாவடியில் வாக்களிப்பதற்காக பயன்படுத்திய வாக்கு இயந்திரத்தைவிட  கூடுதலாக சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் புனித பிரான்சிஸ் சேவியர் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியிலும் வாக்குப்பதிவு முடிந்து அன்று இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில்  சீல் வைக்கப்பட்டன.பின்னர் வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்கு தயாராக இருந்தனர். அப்ேபாது வாக்குசாவடியில் பயன்படுத்திய வாக்கு இயந்திரத்தைவிட கூடுதலாக சில வாக்குப்பதிவு இயந்திரம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திமுக வேட்பாளர் காசிலிங்கம் வந்தார். தேவாலா டிஎஸ்பி அமீர் அகமது மற்றும் போலீசார் கூடுதலாக இருந்த வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படாதவை என தெரிவித்தனர். மேலும் வாக்குப்பதிவு முடிந்து முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக உள்ளது என வேட்பாளர் முன்னிலையில் உறுதி செய்தனர். எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை. அச்சப்படதேவையில்லை என்றுடங டிஎஸ்பி விளக்கம் அளித்தார். அதன்பின் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றினர்.

Tags : Pandharpur ,
× RELATED பந்தலூர் பஜாரில் சாலையில்...