×

பிரமோற்சவ விழா 11ம் தேதி தொடக்கம் ஏற்பாடுகள் தீவிரம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில்

பள்ளிகொண்டா, ஏப்.8:பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் பிரமோற்சவ விழா வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் புகழ்பெற்ற உத்திர ரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 11ம் தேதி செல்வர் உற்சவத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. 12ம் தேதி (திங்கட்கிழமை) முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு அன்னவாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 2ம் நாள் காலை தோளுக்கினியானும், இரவு சிம்ம வாகனமும், 3ம் நாள் காலை அனுமந்த வாகனமும். இரவு புன்னைமரம், 4ம் நாள் காலை நாக வாகனமும், இரவு யாளி வாகனமும், 5ம் நாள் காலை நாச்சியார் திருக்கோளமும், இரவு கருட வாகனமும், மலர் காவடியும் நடக்கிறது.

6ம் நாள் தோளுக்கினியானும், சூர்ணா அபிஷேகமும், 7ம் நாள் மூலவர் முத்தங்கி சேவை, திருத்தேர் உற்சவமும் நடக்கிறது. 8ம் நாள் தொட்டி திருமஞ்சனமும், இரவு குதிரை வாகனமும், 9ம் நாள் ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரியும், சந்திர பிரபை வாகனமும், 10ம் நாள் பிரணவாகர விமானமும், இரவு புஷ்பயாகம் மற்றும் புஷ்ப பல்லக்கிலும் உற்சவ மூர்த்திகள் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வடிவேல் துரை, மணியம் அரி, எழுத்தர் பாபு, உத்திர ரங்கநாதர் கோயில் உற்சவ சேவை சங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Pramorsava Festival ,Intensive Ranganathar Temple ,Pallikonda ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...