×

தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்

கோவில்பட்டி, ஏப்.8: தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடைவெயிலால் குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.தூத்துக்குடி மாட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோவில்பட்டியில் சுட்டெரிக்கும் வெயிலின் அளவு 100 டிகிரிக்கு குறையாமல் பதிவாகி வருகிறது. வெயிலுக்கு பயந்தே பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. பொதுவாக கோடைகால சிறப்பு உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட சீசனில் விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தர்ப்பூசணி பழங்கள், இளநீர், மோர், சர்பத், போஞ்ச், எலுமிச்சை ஜூஸ் உள்பட பழரசங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.கோவில்பட்டி பேருந்து நிலையம், நகராட்சி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது. நகரில் பெரும்பாலான இடங்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலமும் தர்பூசணி  பழங்களை சிறு வியாபாரிகள் விற்று வருகின்றனர்.

Tags : Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...