உலக சுகாதார தினத்தையொட்டி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில்

செய்யாறு, ஏப்.8: செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தையொட்டி பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் செய்யாறு வட்டக்கிளை சார்பில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செய்யாறு ரெட்கிராஸ் சங்கத் தலைவர் ஏ.பி.மாதவன் தலைமை தாங்கினார். தலைமை மருத்துவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இதில் ரெட் கிராஸ் சங்க மாவட்டத் தலைவர் பி.இந்திரராஜன் கலந்து கொண்டு 70 பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பானம் (ஆர்லிக்ஸ்) மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் முத்துமதி, பிரசன்னகீதா, செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைப்பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

வந்தவாசி: வந்தவாசி ரெட்கிராஸ் சங்கம் கிளைசார்பில் உலக சுகாதார தினத்தையொட்டி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரமாக குழந்தைகளை எவ்வாறு பராரிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சங்க தலைவர் மு.ரமணன் தலைமை தாங்கினார்.

இதில் மருத்துவர் முகமது அக்ரம், சித்த மருத்துவர் இந்திரா, செவிலியர் முபாரக் பேகம் ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பழங்கள், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில் மருத்துவர் ஏலவார் குழலி நன்றி கூறினார்.

Related Stories:

>