கே.என்.நேரு உறுதி முசிறியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் உறுதி

தொட்டியம், ஏப்.5: முசிறி தொகுதி திமுக வேட்பாளரும், வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை தொட்டியம் காவல் நிலையம் அருகே தொடங்கி தொண்டர்களுடன் முக்கிய வீதிகளில் நடந்து சென்று உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்து பிரசாரத்தை தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் முன்பாக முடித்தார்.அப்போது அவர் பேசியதாவது.தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்வதற்குநீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றால் மக்களுக்கு விடியல் கிடைக்கும். அதுபோல முசிறி தொகுதியின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவேன். குறிப்பாக முசிறி தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றும் அளவிற்கு எனது செயல் திறன் இருக்கும்.

நமது தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து திமுக முதன்மைச் செயலாளர் நேருவிடம் பட்டியலிட்டு கொடுத்துள்ளேன். தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமையும் நமது கழக ஆட்சியில் பொதுமக்களின் அத்துணை கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்கலாம் என கூறியுள்ளார். எனவே நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும் என்று பேசினார்.ஒன்றிய செயலாளர் திருஞானம், நிர்வாகிகள் நிர்மலா சந்திரசேகர், எஸ் .கே. எஸ். பழனிவேலு, புனித ராணி ,சத்தியமூர்த்தி,ஆறுமுகராஜா, சரவணன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி,மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>