தயார் நிலையில் 3,292 வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு பணியில் 7,500 போலீசார் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொகுதியில் அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

திருச்சி, ஏப்.5: திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வேட்பாளர் கே.என்.நேரு உறுதியளித்தார்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தேர்தல் பரப்புரை இறுதிக்கட்ட நாளான நேற்று காலை முதலே பம்பரமாக சுழன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், சாலை ரோடு, திருந்தாந்தோணி ரோடு, டாக்கர் ரோடு, குறத்தெரு, புத்தூர், உய்யகொண்டான்திருமலை மற்றும் தென்னூர், ஆழ்வார்த்தோப்பு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அப்பகுதியினர் அவருக்கு ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடையே கே.என்.நேரு பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை நிறைவேற்றப்படும். நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று பேசினார்.

Related Stories:

>