திமுக வேட்பாளர் கதிரவன் இறுதிகட்ட பிரசாரம் திருவெறும்பூர் பகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயசூரியனுக்கு தீவிர வாக்குசேகரிப்பு

திருவெறும்பூர், ஏப்.5: திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இறுதிகட்ட பிரச்சாரத்தை துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் நிறைவு செய்தார்.

திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை திருவெறும்பூர் கடைவீதியில் இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டார் அப்போது பேசியதாவது: திருவெறும்பூர் தொகுதியில் 5 ஆண்டுகளாக உங்களோடு பயணித்துள்ளேன். உங்களுக்கு செய்ய வேண்டிய ஒவ்வொரு திட்டத்தையும் போராடிப் போராடித்தான் செய்ய வேண்டியிருந்தது. தற்போது தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார்.

எனவே என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ஒவ்வொருவரும் பத்து வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் துவாக்குடி அண்ணா வளைவு பகுதிக்குச் சென்றார்.அப்போது திமுக முன்னாள் எம்எல்ஏ சேகரன், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, மற்றும் நிர்வாகிகள் ஜெயலட்சுமி குமார், அப்துல் குத்தூஸ், கண்ணதாசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: