வாக்குப்பதிவில் ஈடுபடும் தேர்தல் பணியாளர்களுக்கு இறுதி பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர், ஏப்.5: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், மாநில தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர் அலோக் வர்தன் (ஓய்வு) மற்றும் மாநில தேர்தல் சிறப்பு காவல் பார்வையாளர் தர்மேந்திரகுமார் (ஓய்வு) ஆகியோர் திருவள்ளுர் மாவட்டத்தில், தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து தகவல்களையும் கேட்டறிந்தனர். இக்கூட்டத்தில் திருவள்ளுர் மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், அனைத்து தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா காணொலி வாயிலாக மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான தற்போதைய நிலை குறித்து விரிவாக விளக்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, “திருவள்ளுர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளுர், பூவிருந்தவல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குபதிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 4902 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி முதல் நிலை அலுவலர்கள் 5394 நபர்கள், முதல் நிலை அலுவலர்கள்-15394 நபர்கள், முதல் நிலை அலுவலர்கள்-25394 நபர்கள், முதல் நிலை அலுவலர்கள்-35394 நபர்கள் ஆக மொத்தம் 21576 நபர்களுக்கான இறுதி பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்துகொண்ட முதல் நிலை அலுவலர்கள்  முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் காணொலி வாயிலாகவும், மண்டல அலுவலர்கள் வாயிலாகவும் அவர்களுக்கு வரக்கூடிய  சந்தேகங்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவினை சிறந்த முறையில் முழு ஒத்துழைப்புடன் நடத்துவதற்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டது,” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>