×

தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா இறுதி கட்ட பிரசாரத்தில் கீதாஜீவன் உறுதி

தூத்துக்குடி,ஏப்.5: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் நேற்று காலை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள போத்திவிநாயகர் கோவில் முன்பிருந்து இறுதி கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து குறிஞ்சிநகர், அம்பேத்கர்நகர், கந்தசாமிபுரம், நந்தகோபாலபுரம், மேட்டுப்பட்டி, குரூஸ்புரம், திரேஸ்புரம், பாத்திமாநகர், லெவஞ்சிபுரம், முத்தையாபுரம், முள்ளக்காடு, பிரையண்ட்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்த அவர் அண்ணாநகர் 7வது தெரு சந்திப்பில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இறுதி நாள் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக அரசும் மத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக அரசும் தாங்கள் மக்களுக்கு செய்த திட்டங்களை கூறி வாக்கு கேட்க முடியாமல் எதிர் கட்சியாக இருப்பதுபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து அரசு காலிப்பணியிடங்களும் இளைஞர்கள் மூலம் நிரப்பபடும். தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, கப்பல் கட்டும் தொழிற்சாலை, லாரி முனையம், குரூஸ்பர்னாந்த் நினைவு மண்டபம் அமைக்கப்படும்’ என்றார்.    

இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரிதங்கம், அந்தோணி ஸ்டாலின், பரமசிவம், துணைச்செயலாளர்கள் பாலகுருசாமி, ஜேசையா, சங்கர், ஆபிரகாம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், பகுதி துணைசெயலாளர் பாலு, மாநகர அணி செயலாளர்கள் ஆனந்கேப்ரியல்ராஜ், அருண்குமார், ஜெயக்கனி, டேனியல், மாநகர அணி துணை செயலாளர்கள் செல்வின், இம்மானுவேல் டயஸ், அருண்சுந்தர், பால்மாரி,  முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ஜான்சிராணி, ஜெயசிங், முத்துசெல்வம், தொமுச நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், ஜெபசிங், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம், மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, சந்திரபோஸ், இளைஞர் காங்கிரஸ் நடேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகள் பேச்சிராஜ், தொம்மை, மகாராஜன், பொன்ராஜ்,விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags : Geetha Jeevan ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...