ஆத்தூர் பகுதியில் மது விற்ற 6 பேர் கைது 50 மதுபாட்டில்கள் பறிமுதல் ஆ

றுமுகநேரி, ஏப்.5: ஆத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 6பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆத்தூர் எஸ்.ஐ.க்கள் மாணிக்கராஜ், சுந்தரராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே நாலுமாவடி சாமிநகரை சேர்ந்த அய்யாக்குட்டி மகன் ராமநாதன்(45) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை கைது செய்து 4 மதுபாட்டில்களையும், ரூ.200 ரொக்கபணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முக்காணி ரவுண்டானா அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோயில்தெரு ராஜ் மகன் ஐசக்(33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 மதுபாட்டில்களையும், 200 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இதுபோல முக்காணி பாலம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பழையகாயல் அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் ராஜன்(45)என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களையும், ரூ.200யும் பறிமுதல் செய்தனர். ஆத்தூர் கூலக்கடை பஜார் அருகே சட்டவிரோதமாக மது விற்க முயன்ற புன்னக்காயல் வடக்குத்தெரு ஹிட்லர் மகன் தாமஸ்(58), புன்னக்காயல் மற்க்குடி தெரு சாந்தப்பா மகன் திலகர்(52) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 14 மதுபாட்டில்களையும், ரூ.200யும் கைப்பற்றினர். தெற்கு ஆத்தூர் தனியார் தியேட்டர் அருகே அரசு அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட புன்னக்காயல் பொன்மாணிக்க தெரு பவுல் மகன் தவராஜ்(55) என்பவரையும் கைது செய்த ஆத்தூர் போலீசார் அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>