×

திமுக ஆட்சி அமைந்ததும் முன்மாதிரி தொகுதியாக திருச்செந்தூரை மாற்றுவேன் இறுதி கட்ட பிரசாரத்தில் அனிதாராதாகிருஷ்ணன் உறுதி

திருச்செந்தூர், ஏப்.5: திமுக ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் முன்மாதிரி தொகுதியாக மாறும் என திருச்செந்தூரில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் பேசினார்.  திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் இறுதிகட்ட பிரசாரத்தை உடன்குடி அருகேயுள்ள மணப்பாட்டில் நேற்று காலைதுவக்கினார். தொடர்ந்து சிறுநாடார்குடியிருப்பு, வேதகோட்டைவிளை, உடன்குடி மெயின்பஜார், செட்டியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத் பஜார், தென்திருப்பேரை பஜார், குரும்பூர் பஜார், ஆத்தூர், தெற்கு ஆத்தூர், மேலாத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டணம், வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூர் பஜார், சன்னதி தெரு, முத்தாரம்மன் கோயில் தெரு, தோப்பூர், அமலிநகர், ஆலந்தலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து மாலை திருச்செந்தூர் பேரூராட்சி சிலை அருகே காமராஜர் சிலைக்கு மாைலயைணிவித்து இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: 234 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பது உறுதி. திருச்செந்தூர் தொகுதியில் சாதி, மதங்களுக்கு இடம்கொடுக்காமல் எல்லோரையும் ஆதரித்து செல்கிறேன். திருச்செந்தூரில்  பாதாள சாக்கடை திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தொகுதி முழுவதும் மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் முன் மாதிரி தொகுதியாக திருச்செந்தூர் தொகுதி இருக்கும்’என்றார். பிரசாரத்தில் மாநில திமுக மருத்துவரணி செயலாளர் டாக்டர் வெற்றிவேல், மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜபாண்டியன், சிவசுப்பிரமணியன், லதா கலைச்செல்வன், பொன்முருகேசன், வழக்கறிஞர் ஜெபராஜ், இசக்கிமுத்து மற்றும் பள்ளிபத்து பால்பாண்டியன், ராசிசுப்பிரமணியன், வழக்கறிஞர் சுப்பிரமணியன், ஆட்டோ கண்ணன், ராஜமோகன், கலைச்செல்வன், சிவலூர் ரவி, கோமு, மணல்மேடு சுதாகர், சுரேஷ், தனசேகரன், பிச்சவேல், பவுல்ராயன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், வட்டார செயலாளர் கார்க்கி, நகர காங்கிரஸ் தலைவர் முருகேந்திரன், நகர இளைஞரணி செயலாளர் குமுதன், சிவசுப்பிரமணியன், விசிக மண்டல செயலாளர் தமிழினியன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இறுதிகட்ட பிரசாரத்தின் போது தேமுதிக தொகுதி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 10 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அனிதாராதா கிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Tags : Anitha Radhakrishnan ,Thiruchendur ,DMK ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...