×

நெல்லை டவுனில் இறுதிக்கட்ட பிரசாரம் மத்தியஅரசின் அடிமை ஆட்சியை

நெல்லை, ஏப். 5:  மத்திய அரசின் அடிமையாக செயல்படும் அதிமுக ஆட்சியை நாளை நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவர் என நெல்லை டவுனில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ. பேசினார். நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ., டவுன் ரதவீதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு நேற்று மாலை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டு தேரடித் திடலில் நிறைவுசெய்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘தமிழகத்தை ஆண்ட அதிமுக கட்சி 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டுசென்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் டவுன் பகுதிகளில் தோண்டப்பட்ட சாலைகள் உருக்குலைந்துள்ளன. மார்க்கெட், பஸ் நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பாழ்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலை  நடத்தாததால் அனைத்து அடிப்படை வசதிகளும் தடைபட்டுள்ளன.

 திமுக ஆட்சி மலர்ந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும்  நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும். லஞ்சம் லாவண்யத்தில் ஊறிய அதிமுக, கடந்த 5 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருக்கு எதிரான ஆட்சியை நடத்தியுள்ளது. வருமான வரித்துறையை ஏவும் மத்திய பாஜ அரசின் மிரட்டல்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பயப்பட மாட்டோம். மத்திய அரசின் அடிமையாக செயல்படும் அதிமுக ஆட்சியை இத்தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவர்’’ என்றார்.  பிரசாரத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியன், பகுதி செயலாளர்கள் நமசிவாயம் என்ற ேகாபி, ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், முன்னாள் பகுதி செயலாளர் உலகநாதன், எல்ஐசி பேச்சிமுத்து, வக்கீல்கள் கந்தசாமி, கலைச்செல்வன், தச்சை பகுதி செயலாளர் டாக்டர் சங்கர், பி.எம். சரவணன், பாம்பு கிருஷ்ணன், பட்டு யாதவ், நெல்லை முத்தையா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் மேகை செல்வம், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செல்வானந்த், புகழேந்தி மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Nellie Town ,
× RELATED கயத்தாறு அருகே லாரி மீது வேன் மோதி நெல்லை தொழிலதிபர் பலி