×

உத்தரவு மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை

போடி தொகுதியில் வெளியூர்காரர்கள் வெளியேற போடி, ஏப். 5: போடி சட்டமன்றத் தொகுதியில் நாளை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக தொகுதியில் 383 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன். இந்நிலையில், போடி அருகே அரசு பொறியியல் கல்லூரியில் 1,441 வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போடி தொகுதில் திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், அமமுக சார்பில் முத்துச்சாமி, மக்கள் நீதி மையம் சார்பில் கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம்சந்தர் உள்ளிட்ட 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 22ம் தேதி இறுதி வேட்பாளர் முடிவு செய்யபப்பட்டதிலிருந்து பிரச்சாரம் தொடர்ந்து நேற்று மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.

அதன்பிறகு 7 மணிக்கு மேல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி ஒவ்வொரு கட்சிகளிலிருந்தும் தேர்தல் பணி செய்வதற்காகவும் மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் வெளியூரிலிருந்து வந்திருப்பவர்கள் நேற்று இரவே வெளியேறி விடவேண்டும். இதை மீறுபவர்களுக்கு 2 வருடம் சிறையும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி போடி நகரில் மற்றும் கிராமப்புறங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள், உறவினர் வீடுகளில் இருப்பவர்களையும் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் வெளியூர் ஆட்கள் தங்கியிருக்கிறார்கள் என தெரிய வந்தால் கைது செய்யப்படுவர். எனவே, போடி சட்டமன்ற தொகுதியில் தங்கி இருக்கும் வெளியூர் ஆட்கள் உடனடியாக வெளியேற அறிவக்கப் பட்டுள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு