கடமலை-மயிலை ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

வருசநாடு, ஏப். 5: கடமலை-மயிலை ஒன்றியத்தில், ஆண்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து, திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது, திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் பற்றியும் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர். இப்பிரச்சாரத்தின்போது கடமலை-மயிலை தெற்கு ஒன்றியச் செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, வடக்கு ஒன்றியச்செயலர் தங்கப்பாண்டி, ஒன்றிய நிர்வாகிகள் பவுன்ராஜ், முருகன், சோலைராஜா, சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: